டான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்...!
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், டான் படம் இந்த மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றி புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்," இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 'ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாவதை கருத்தில் கொண்டு டான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thoroughly enjoyed working with @iam_SJSuryah sir and his energy was infectious ❤️👍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 2, 2022
See you in theatres 😊👍 #DONfromMay13#DONpic.twitter.com/aYgWd7L35U
Related Tags :
Next Story