புதிய டிரைலரை வெளியிட்டுள்ள ‘ராதே ஷ்யாம்’ படக்குழு
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ராதே ஷ்யாம் படத்தின் புதிய டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.
சென்னை,
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 'ராதே ஷ்யாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
Related Tags :
Next Story