தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் அனுஷ்கா?
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
கடந்த 2016ம் ஆண்டு வெளியான 'சிங்கம் 3' படத்தில் கடைசியாக நடித்திருந்த அனுஷ்கா ஷெட்டி. இதைத்தொடர்ந்து அவர் நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை.
சிறு சிறு வேடங்களில் நடித்த அனுஷ்கா பெரிய அளவில் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் ஏ.எல்.விஜயுடன் கைக்கோர்க்க இருக்கிறார். முன்னதாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா.
அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ.எல்.விஜய் - அனுஷ்கா கூட்டணி புதிய படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் ஏ.எல்.விஜய். இதில் அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story