குதிரை வால் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
பா. ரஞ்சித் தயாரித்துள்ள குதிரை வால் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் சியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடித்துள்ள திரைப்படம் 'குதிரை வால்'. இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் அஞ்சலி படீல், சவுமியா ஜகன் மூர்த்தி, ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குதிரை வால் திரைப்படம் மார்ச் 18-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் நாளை (மார்ச் 10) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
The awaited #KuthiraivaalTrailer releasing tomorrow at 10 AM @vigsun@KalaiActor@AnjaliPOfficial@Manojjahson@Shyamoriginal@karthikmuthu14@Gridaran@RamuThangraj@anthoruban@pradeep_1123@naanVPR
— pa.ranjith (@beemji) March 9, 2022
#SathishRaja#kuthiraivaalfrommarch18th#Kuthiraivaalpic.twitter.com/9t8fEgaBbL
Related Tags :
Next Story