பிரபல நடிகையின் துணிக்கடையில் தீ விபத்து
நடிகை காவ்யா மாதவனுக்கு சொந்தமான துணிக் கடையில்திடீர் தீவிபத்து ஏற்பட்டு துணிகள் எரிந்து நாசமானது.
தமிழில் காசி, என் மன வானில், சாதுமிரண்டா ஆகிய படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். காவ்யா மாதவனும், நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து பிரிந்த பிரபல மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
காவ்யா மாதவனுக்கு சொந்தமாக கேரள மாநிலம் எடப்பள்ளி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் துணிக்கடை உள்ளது. இந்த துணி கடையில் அதிகாலை 3 மணிக்கு திடீர் தீவிபத்து எற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் கடையில் இருந்த துணிகளும், தையல் எந்திரங்களும் எரிந்து நாசமானது, மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story