மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார் ஐஸ்வர்யா தனுஷ்..!
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
மும்பை,
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள ஐஸ்வர்யா மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா தற்போது 'முசாபிர்' என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த ஆல்பம் தமிழில் 'பயணி', தெலுங்கில் 'சஞ்சாரி', மலையாளத்தில் 'யாத்ராக்காரன்', ஹிந்தியில் 'முசாபிர்' என்று வெளியாக உள்ளது. இந்த ஆல்பத்தின் போஸ்டரை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்.
Related Tags :
Next Story