கொடைக்கானல் காட்டுத்தீ: கார்த்தி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ 6-வது நாளாக பற்றி எரிகிறது.
சென்னை,
வறண்ட வானிலை காரணமாக கொடைக்கானல் பகுதியில் கடந்த 5 நாட்களாக காட்டுத்தீ பரவி அரிய வகை மரங்கள், மூலிகைகள் எரிந்து வருகிறது. வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகிறார்கள். இந்தநிலையில் காட்டுத்தீயை தடுக்க நடிகர் கார்த்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் கார்த்தி பேசும்போது, “கோடை வெயிலுக்கு இதமளிக்கின்ற, இயற்கை தந்த வரம் கொடைக்கானல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இது கனவுப் பிரதேசம். எத்தனையோ வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் இங்கே இருக்கின்றன. ஒரு எச்சரிக்கை. இது நெருப்புக் காலம். எளிதில் பற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளது காடு.
ஒரு சிறு தீப்பொறி பட்டால் போதும். காட்டுடன் சேர்ந்து வன விலங்குகளும், பறவைகளும் அழிந்துபோகிற அபாயம் இருக்கிறது. அதனால் பொதுமக்களாகிய நாம் எல்லோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிரான இந்தப் போரில் வனத் துறையுடன் இணைந்து நிற்போம். நன்றி!” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story