மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா...!
சமந்தா இந்தி வெப் தொடரில் நடிகர் வருண் தவானுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மும்பை,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா ‘பேமிலி மேன் 2‘ வெப் தொடரில் போராளியாக நடித்து உலக அளவில் புகழ் பெற்றார். விருதுகளும் கிடைத்தன.
இந்த தொடரில் ஈழ தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகளும் கிளம்பின. பின்னர் இதற்காக வருத்தமும் தெரிவித்தார். பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு பிறகு சமந்தாவுக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.
இந்த நிலையில் சமந்தா இன்னொரு இந்தி வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரை இரட்டை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப் தொடரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த தொடரை உருவாக்குகிறார்கள்.
இதில் இந்தி நடிகர் வருண் தவான் கதாநாயகனாக வருகிறார். மும்பையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் சமந்தாவும் இணைந்துள்ளார்.
மேலும் சண்டை பயிற்சிகள் எடுத்து இந்த தொடரில் சமந்தா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story