66-வது படத்துக்கு தயாரான விஜய்


66-வது படத்துக்கு தயாரான விஜய்
x
தினத்தந்தி 14 March 2022 3:25 PM IST (Updated: 14 March 2022 3:25 PM IST)
t-max-icont-min-icon

விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பள்ளி இயக்குகிறார். விஜய்யும் 66-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. 

தொடர்ந்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பள்ளி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விஜய்யின் 66-வது படத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து படப்பிடிப்பு வேலைகள் தொடங்க உள்ளன. விஜய்யும் 66-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். படப்பிடிப்பை அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். 

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா ஏற்கனவே கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். விவேக் ஓபராய் விவேகம் படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்து இருந்தார்.


Next Story