ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி அனுபவம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சினேகா உடன் நடித்த அனுபவத்தை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளிலும் நடிக்கிறார். தெலுங்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது, தமிழில் 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். அத்துடன் விளம்பர படங்களிலும் வருகிறார்.
சமீபத்தில் சினேகாவுடன் இணைந்து விளம்பர படத்தில் நடித்த அனுபவத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சிறு நினைவை பகிர்ந்து கொள்கிறேன். நான் சிறுமியாக இருந்தபோது ஐதராபாத் ராமோஜி திரைப்பட நகரில் ஒரு ஓரத்தில் நின்று முதல் முறையாக படப்பிடிப்பை பார்த்தேன். அந்த படப்பிடிப்பில் சினேகாவைத்தான் பார்த்தேன். எனது அம்மா போகலாம் வா என்று அழைத்தார். இப்போது நான் சினேகாவுடன் சேர்ந்து நடித்தபோதும் அதே உணர்வுதான் இருந்தது. இது அருமையான வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story