பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 March 2022 5:52 PM IST (Updated: 16 March 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டை பிரபல நடிகர் தனது வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின. 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது என்று அப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.


Next Story