சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு..!
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சந்தானம் தற்போது தெலுங்கில் வெளியான 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஏஜென்ட் கண்ணாயிரம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
Unleashing the motion poster and title of Rathna Kumar’s film. #GuluGulu.
— Gauthamvasudevmenon (@menongautham) March 16, 2022
Best wishes to the team#GuluGuluTitleMotionPoster - https://t.co/7TAUhor6wX@iamsanthanam@MrRathna@circleboxE@Music_Santhosh@KVijayKartik@rajnarayanan_@SonyMusicSouth@proyuvraajpic.twitter.com/dDdxcZWbZb
இயக்குனர் ரத்ன குமார் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு 'குளு குளு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.
Related Tags :
Next Story