1 மில்லியன் பேர் பார்த்து ரசித்த பீஸ்ட் படத்தின் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல்!
நடிகர் விஜய் ரசிகர்கள் இந்த பாடலின் முன்னோட்ட வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,யூடியூப்பில் சாதனையும் படைத்தது .
அதனை தொடர்ந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கு கார்த்திக் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இந்த ‘ஜாலியோ ஜிம்கானா' பாடல் வீடியோவை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் யூ-ட்யூப்பில் கண்டு ரசித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய் ரசிகர்கள் இந்த பாடலின் முன்னோட்ட வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
Jolly-ya Getha Kattiyachu Nanba!
— Sun Pictures (@sunpictures) March 19, 2022
1M+ real time views for #JollyOGymkhana in 15 mins 😍
▶ https://t.co/aw5qDrDPrY@actorvijay@Nelsondilpkumar@anirudhofficial@kukarthik1@hegdepooja@manojdft@AlwaysJani@Nirmalcuts#Beast#BeastSecondSinglepic.twitter.com/y8pDaMOImM
Related Tags :
Next Story