விஜய் கடின உழைப்பாளி- பூஜா ஹெக்டே
திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு விஜய் - பூஜா ஹெக்டே ஆகியோரின் கலக்கலான நடனம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூஜா ஹெக்டே விஜய் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். ‘‘இதுவரை எத்தனையோ முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ஆனால், விஜய்யை போன்று ஒரு கடினமான உழைப்பாளியை இதுவரை நான் பார்க்கவில்லை’’, என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
Related Tags :
Next Story