'தலைவர் 169' பட அறிவிப்பு வீடியோ புதிய சாதனை.!
ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வீடியோ புதிய சாதனையை படைத்துள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 169 ஆவது படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும், இசையமைப்பாளர் அனிருத்தும் நிற்பது போன்ற காட்சிகளும், நடிகர் ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து சிரிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ வெளியான சமயத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஒரு படத்தின் முன் அறிவிப்பு வீடியோவிற்கு தென் இந்தியாவிலேயே அதிக லைக்குகளை பெற்றது. இதுதான் என்ற சாதனையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
Related Tags :
Next Story