கசிந்த அஜித்தின் 61-வது பட கதை


61-வது படத்தில் அஜித் தோற்றம்
x
61-வது படத்தில் அஜித் தோற்றம்
தினத்தந்தி 31 March 2022 4:17 PM IST (Updated: 31 March 2022 4:17 PM IST)
t-max-icont-min-icon

அஜித்தின் 61-வது படத்தின் கதை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வலிமை படம் திரைக்கு வந்து ரூ.200 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. இந்த படத்துக்கு சில இணைய தளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. இதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பானது. அடுத்து அஜித் நடிக்க உள்ள 2 புதிய படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு படத்தை வினோத் மீண்டும் இயக்க இருக்கிறார். 

இது அஜித்குமாருக்கு 61-வது படம். அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இந்நிலையில் 61-வது படத்தின் கதை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று வில்லன் வேடம் என்கின்றனர். வங்கி கொள்ளையை மைய கருவாக வைத்து இந்த படம் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் அஜித்குமாருக்கு பெரிய அளவில் சண்டை காட்சிகள் இருக்காது என்றும் கூறுகின்றனர். 

படம் குறித்து இயக்குனர் வினோத் ஏற்கனவே கூறும்போது, “அஜித்தின் 61-வது படத்தில் கதாநாயகனும் அவர்தான். வில்லனும் அவர்தான். இதை வைத்து இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா என்று கேட்டால் அதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது’’ என்றார். இந்த படத்துக்காக நீண்ட தாடி வளர்த்துள்ள அஜித் தோற்றம் வெளியாகி உள்ளது.


Next Story