ரஜினிகாந்தின் வாழ்த்துகளை மறைத்தது ஏன்? சீனு ராமசாமி விளக்கம்
‘மாமனிதன்’ படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், படத்தின் டைரக்டர் சீனுராமசாமியை வாழ்த்தியுள்ளார். முன்கூட்டியே ரஜினிகாந்த் வாழ்த்தியதை ஏன் சொல்லவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘மாமனிதன்’. இந்த படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி போனது. இந்த படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜூவல் மேரி, அனிகா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்.விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன்சங்கர்ராஜா ஆகியோரின் கூட்டணியில் ஏற்கனவே ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.‘மாமனிதன்’ படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், படத்தின் டைரக்டர் சீனுராமசாமியை வாழ்த்தியுள்ளார். இந்த தகவலை சீனுராமசாமி தற்போது வெளியிட்டிருக்கிறார். முன்கூட்டியே ரஜினிகாந்த் வாழ்த்தியதை ஏன் சொல்லவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சீனுராமசாமி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜனவரியில் ‘மாமனிதன்’ படம் பார்த்து வாழ்த்தி, நெகிழ்வாக தொலைபேசியில் ரஜினிகாந்த் பேசியதை வெளியே சொல்லவில்லை. ஏனெனில் அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். ரஜினிகாந்திடம் ‘நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள், அதுபோதும்’ என்றேன். ரஜினிகாந்துக்கு நன்றி.
இவ்வாறு சீனுராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story