நாக சைதன்யாவின் புதிய படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு


நாக சைதன்யாவின் புதிய படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு
x

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

சென்னை,

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது , தொடர்ந்து   வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்  ‘மன்மத லீலை

 இந்நிலையில் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். 

இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் சக கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Next Story