பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 April 2022 8:56 PM IST (Updated: 7 April 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

கேஜிஎப்-2 படத்திற்கு 200 -250 திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர உள்ளது.

அதில் முக்கியமாக நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அதேபோல யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இந்த இரு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகளும், ஏப்.14ல் வெளியாகவுள்ள கேஜிஎப்-2  திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாக  திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Next Story