4 மொழிகளில் தயாராகும் உபேந்திரா படம்
கன்னட நடிகர் உபேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
‘ஏ’, ‘ஷ்ஷ்’ படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர், உபேந்திரா. கன்னட நடிகரான இவர், இந்திய அளவில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை .
பாகுபலி, புஷ்பா ஆகிய படங்களின் வெற்றி, உபேந்திரா நடிக்கும் புதிய படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
படத்தைப் பற்றி டைரக்டரும், நடிகருமான உபேந்திரா கூறியதாவது:-
‘‘பெரிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பான் இந்தியன் படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. சிந்தனையை தூண்டும் வகையிலான சினிமா அனுபவத்தை ஒட்டுமொத்த இந்திய பார்வையாளர்களும் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்.
என்னை டை ரக்டர்-நடிகராக உருவாக்கியதே ரசிகர்கள்தான். அவர்களின் விசில் மற்றும் கைதட்டல் மூலம் தான் 33 வருடங்களாக இயங்கி வருகிறேன். இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன்.’’
Related Tags :
Next Story