வட இந்தியா, தென்னிந்தியா என்ற பாகுபாடு தேவை இல்லை - ஏ.ஆர். ரகுமான்


வட இந்தியா, தென்னிந்தியா என்ற பாகுபாடு தேவை இல்லை - ஏ.ஆர். ரகுமான்
x
தினத்தந்தி 11 April 2022 1:09 PM IST (Updated: 11 April 2022 1:09 PM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது.

சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் ஏ.ஆர். ரகுமானுக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்தியா தான். இதில் வட இந்தியா, தென் இந்தியா என்ற பாகுபாடு தேவை இல்லை. ஒற்றுமையே முக்கியமான தேவை என்று கூறினார்.

இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறியதாவது:-

7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றிருந்தபோது என்னிடம் ஒரு சீனர், வட இந்தியர்கள் நிறமாக இருப்பதாகவும், அவர்களின் படங்களை விரும்பி பார்ப்பதாகவும் கூறினார். அவர் தென்னிந்திய படங்களை பார்த்தாரா? எதற்காக அப்படி கூறினார் என்று எனக்குள் கேள்வி எழுந்தது. இதனால் நான் மிகவும் பாதிப்படைந்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் வட இந்தியா, தென் இந்தியா என்று இல்லை. இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்தியா தான். பாகுபாடு தேவை இல்லை. ஒற்றுமையே முக்கியமான தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story