ராதே ஷியாம் படம் தோல்விக்கு பிரபாஸ் விளக்கம்


ராதே ஷியாம் படம் தோல்விக்கு பிரபாஸ் விளக்கம்
x
தினத்தந்தி 21 April 2022 2:47 PM IST (Updated: 21 April 2022 2:47 PM IST)
t-max-icont-min-icon

ராதே ஷியாம் தோல்வி குறித்து முதல் தடவையாக பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராதே ஷ்யாம் திரைப்படம் ரூ 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராதே ஷியாம் தோல்வி குறித்து முதல் தடவையாக பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ராதே ஷியாம் சரியாக போகாததற்கு கொரோனா பரவல் காரணமாக இருக்கலாம் அல்லது திரைக்கதையில் ஏதேனும் குறை இருந்து இருக்கலாம். மக்கள் என்னை அந்த கதாபாத்திரத்தில் பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

பாகுபலி வெற்றிக்கு பிறகு, நான் நடிக்கும் படங்களை இயக்கும் டைரக்டர்களுக்கு சில அழுத்தங்கள் உள்ளன. ஆனால் எனக்கு அழுத்தம் எதுவும் இல்லை. பாகுபலி படத்தில் நான் நடித்தது அதிர்ஷ்டம். ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படங்களில் தொடர்ந்து நடிக்க உழைக்கிறேன்’’ என்றார்.

Next Story