மீண்டும் நடிக்க வரும் திவ்யா உன்னி


மீண்டும் நடிக்க வரும் திவ்யா உன்னி
x
தினத்தந்தி 26 April 2022 2:54 PM IST (Updated: 26 April 2022 2:54 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக திவ்யா உன்னி தெரிவித்துள்ளார்.

தமிழில் ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் அருண்குமார் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் வசிக்கிறார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக திவ்யா உன்னி தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சினிமாவோடு எனக்கு இருந்த தொடர்பை நான் விடவில்லை. புதிய படங்கள் அனைத்தையும் பார்த்து வருகிறேன். சில கதைகளையும் கேட்டு இருக்கிறேன். சரியான நேரம் அமையும்போது மீண்டும் படங்களில் நடிப்பேன். நான் மூத்த மலையாள இயக்குனர்களான ஐ.வி.சசி, பரதன், சிபி, ஷாஜி கைலாஸ் உள்ளிட்டோர் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவர்களிடம் கதையை கேட்டு நான் நடித்தது இல்லை. எனக்கு நல்ல கதாபாத்திரங்களை அவர்கள் கொடுத்தார்கள். உஸ்தாத் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை இப்போதும் ரசிகர்கள் மனதில் வைத்து இருக்கிறார்கள்’’ என்றார்.


Next Story