சாமியார் கெட்டப்பில் யோகி பாபு


சாமியார் கெட்டப்பில் யோகி பாபு
x
தினத்தந்தி 2 May 2022 6:03 PM GMT (Updated: 2 May 2022 6:03 PM GMT)

காமெடி நடிகர் யோகி பாபு சாமியார் கெட்டப்பில் படம் ஒன்று நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் முன்னனி நடிகர்களின் படத்தி காமெடி காட்சிகளில் மட்டும் வருவது மட்டுமல்லாமல், காமெடி கலந்த முழு படத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் என்பவரது இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் படத்தில் சன்னி லியோனும் நடிக்கிறார் என்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், படக்குழு படம் தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் யோகிபாபு சாமியார் வேடத்தில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story