எளிமையான முறையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் மகள் திருமணம்
ஏ.ஆர். ரஹ்மானின் மகள் திருமணம் சென்னையில் நேற்று எளிமையாக நடைபெற்றது.
சென்னை,
ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கும், ஆடியோ இன்ஜியரான ரியாசுதீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டாரத்துடன் சென்னையில் நேற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிக்கு பின் மகள், மருமகன் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் எனவும், அனைவரது அன்பிற்கும் முன்கூட்டியே நன்றி எனவும் குறிப்பிட்டார்.
தாயார் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளதோடு, புதுமண தம்பதிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story