சிபி சத்யராஜ் நடித்துள்ள 'ரங்கா' படத்தின் டிரைலர் வெளியீடு..!


சிபி சத்யராஜ் நடித்துள்ள ரங்கா படத்தின் டிரைலர் வெளியீடு..!
x
தினத்தந்தி 8 May 2022 12:16 AM GMT (Updated: 2022-05-08T05:51:02+05:30)

நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள 'ரங்கா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் வினோத் டி.எல் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் 'ரங்கா'. இந்த படத்தில் நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜீவன் இசையமைத்துள்ளார். அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் கே செல்லையா தயாரித்துள்ளார்.

ரங்கா திரைப்படம் வருகிற 13-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரங்கா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டார். 

வித்தியாசமான சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ள சிபி சத்யராஜூக்கு வலதுகை அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ற மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு ரங்கா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

Next Story