குழந்தை பெற்ற பின்பு காஜல் அகர்வால்


குழந்தை பெற்ற பின்பு காஜல் அகர்வால்
x
தினத்தந்தி 8 May 2022 3:14 PM IST (Updated: 8 May 2022 3:14 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வாழ்வில் புதிய உறவு கிடைத்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் இந்த தகவலை அறிவித்தார். தற்போது பிரசவத்துக்கு பின்னர் மீண்டும் அவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பெரியளவில் அவர் படங்கள் நடிக்கவில்லை.

‘ஹே சினாமிகா’ எனும் படத்திலும், ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் திகில் வெப் தொடரில் மட்டும் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்த காஜல் அகர்வால், கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுபழக்கம், மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள் போன்றவற்றையும் வீடியோவாக தொடர்ந்து வெளியிட்டு வந்தார். கர்ப்ப காலத்திலும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டார்.

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வாழ்வில் புதிய உறவு கிடைத்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் இந்த தகவலை அறிவித்தார். தற்போது பிரசவத்துக்கு பின்னர் மீண்டும் அவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். மாடர்ன் உடை அணிந்தபடி தன்னை பல்வேறு கோணங்களில் கலக்கலாக புகைப்படங்கள் எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘காஜல் ரிட்டர்ன்ஸ்’ என்றும், ‘பிரசவத்துக்கு பின்னர் காஜல் இன்னும் அழகாகிவிட்டீர்கள்’ என்றும் புகழ்ந்து வருகிறார்கள்.

அதேவேளை குழந்தை பிறந்ததற்கு பிறகு இப்படி போட்டோஷூட் அவசியமா என்றும் விமர்சனங்கள் ஒருபுறம் எழுகின்றன. எது எப்படி இருந்தாலும் இந்த புகைப்படங்கள் காஜல் அகர்வால் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

Next Story