அன்னையர் தினத்தில் காஜல் நெகிழ்ச்சி
நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தை குறித்து உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் கிச்சுலு என்று பெயர் வைத்துள்ளனர்.
அன்னையர் தினத்தையொட்டி தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், .“அன்புள்ள நீல், நீதான் எனக்கு முதலானவன். நீ எனக்கு விலைமதிப்பற்றவன் என்பதை எப்போதும் உணர வைக்க வேண்டும். உன்னை என் கைகளில் முதல்முறை பிடித்த தருணம், உன் சூடான சுவாசம், உன் அழகான கண்கள் அனைத்தையும் எப்போதும் விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும். நீ என் முதல் குழந்தை. என் முதல் மகன். எனது எல்லாமும் நீதான். வருகின்ற ஆண்டுகளில் உனக்கு சிறந்தவைகளை கற்றுக்கொடுப்பேன். நீ நிறைய விஷயங்களை எனக்கு தெரிய வைத்துள்ளாய். தாய்மையை உணர வைத்துள்ளாய். தன்னலமற்று இருக்க கற்றுக்கொடுத்து இருக்கிறாய். நீ வலிமையாக அன்பானவனாக அனைவருக்கும் பிடித்தவனாக வளர வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story