அஜித்துக்கு வில்லனாக ‘சார்பட்டா' வேம்புலி
அஜித்துக்கு வில்லனாக ‘சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஐதராபாத்தில் 9 ஏக்கர் நிலபரப்பில் சென்னை அண்ணாசாலையை அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இது அஜித்துக்கு 61-வது படம். இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என்றும் பேசப்படுகிறது. வங்கி கொள்ளை கதையம்சத்தில் அதிரடி, திகில் காட்சிகளுடன் படமாகிறது. அஜித் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்க இருப்பதாகவும் மஞ்சுவாரியருக்கு இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரம் என்றும் அவருக்கு சண்டை காட்சிகளும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மஞ்சுவாரியர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து பாராட்டுகள் பெற்றார். மலையாளத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஜான் கொக்கனிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜான் கொக்கன் ஏற்கனவே ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். படத்தில் இவரது வித்தியாசமான குத்துச்சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கே.ஜி.எப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.
Related Tags :
Next Story