தமன்னாவுக்கு இறுதி வாய்ப்பு


தமன்னாவுக்கு இறுதி வாய்ப்பு
x
தினத்தந்தி 10 May 2022 2:36 PM IST (Updated: 10 May 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

தமன்னா, மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சேகர் கம்முலா இயக்கிய ஹேப்பி டேஸ் தெலுங்கு படம் மூலம் பிரபலமான தமன்னா அதிக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இரு மொழிகளிலும் தனக்குள்ள இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். ஆனால் இந்தி படங்கள் மட்டும் அவருக்கு ராசியாக அமையவில்லை என்கின்றனர்.

இந்தியில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார். கவர்ச்சியில் தாராளம் காட்டும் தமன்னாவுக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்று இந்தி திரையுலகினர் முத்திரை குத்தி வைத்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல் அஜய்தேவ்கானுடன் நடித்த ஹிம்மத்வாலா, அக்சய்குமாருடன் நடித்த எண்டெர்டெயின்மெண்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இதனால் இந்தி படங்களில் நடிக்கும் ஆசையை துறந்து தமிழ், தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

தற்போது மீண்டும் அவருக்கு கடைசி வாய்ப்பாக விருது படங்களை எடுத்து பிரபலமான மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் இந்தியில் தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குவியும் என்றும், தோற்றால் மீண்டும் தென்னிந்திய படங்களையே நம்பி இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.


Next Story