சந்தானம் நடித்துள்ள 'குலு குலு' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!


சந்தானம் நடித்துள்ள குலு குலு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
x
தினத்தந்தி 11 May 2022 4:49 PM IST (Updated: 11 May 2022 4:49 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'குலு குலு' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் சந்தானம் தற்போது 'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு 'குலு குலு' என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

மேலும் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ளளார். 

'குலு குலு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story