விரைவில் அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 11 May 2022 3:14 PM GMT (Updated: 2022-05-11T20:44:56+05:30)

வருடாந்திர உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்க செல்ல இருக்கிறார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.

அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story