வைரலாகும் ஆண்ட்ரியாவின் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!


வைரலாகும் ஆண்ட்ரியாவின் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
x
தினத்தந்தி 11 May 2022 4:37 PM GMT (Updated: 2022-05-11T22:07:32+05:30)

நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் பிரபல பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'அனல் மேலே பனித்துளி' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தை இயக்குனர் கெய்சர் ஆனந்த் இயக்குகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Next Story