விவசாய நிலத்தில் கார் பந்தயம்: பிரபல நடிகர் மீது வழக்கு
அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனுசின் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தவர் ஜோஜு ஜார்ஜ். மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கிறார். ஜோசப் என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜுக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த படம் தமிழில் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் திரைக்கு வந்தது. இரண்டு தடவை கேரள அரசு விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் லாகமணியில் உள்ள எஸ்டேட் பகுதியில் நடந்த கார் பந்தயத்தில் ஜோஜு ஜார்ஜ் தனது ஜீப்புடன் பங்கேற்றார். கார் பந்தயத்தில் ஜோஜூ ஜார்ஜ் வேகமாக ஜீப்பை ஓட்டிசெல்லும் காட்சிகள் இணையதளத்தில் பரவின. இதையடுத்து விவசாயம் செய்ய அனுமதித்த பகுதியில் எந்தவித பாதுகாப்பு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யாமல் கார் பந்தயத்தில் ஈடுபட்ட ஜோஜு ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள மாணவர் சங்கம் போலீசில் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து ஜோஜு ஜார்ஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story