ஐதராபாத்தில் விஜய் படப்பிடிப்பு


ஐதராபாத்தில் விஜய் படப்பிடிப்பு
x
தினத்தந்தி 13 May 2022 5:56 AM IST (Updated: 13 May 2022 5:56 AM IST)
t-max-icont-min-icon

‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து விஜய், நடிக்கும் புதிய படத்தை வம்சி இயக்குகிறார்.

‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து விஜய், நடிக்கும் புதிய படத்தை வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ‘தளபதி 66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.

இது ஒரு குடும்பக் கதை என்றும், அண்ணன்-தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும் பேசப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்யின் அம்மாவாக ஜெயசுதா நடிக்கிறார். இந்தத் தகவலை பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயசுதா, ஏற்கனவே வம்சி இயக்கத்தில் வெளிவந்த ‘தோழா’ படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அரங்கேற்றம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயசுதா ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் பிரகாஷ்ராஜ் மனைவியாக அவர் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது விஜய் படத்தில் ஜெயசுதா நடித்துக்கொண்டிருக்கிறார்.

Next Story