'பையா' படத்தின் 2-ம் பாகத்தில் வேறு காதலர்கள் இருப்பார்கள் - இயக்குனர் லிங்குசாமி


பையா படத்தின் 2-ம் பாகத்தில் வேறு காதலர்கள் இருப்பார்கள் - இயக்குனர் லிங்குசாமி
x

‘பையா 2’ படத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்றால் வேறு நடிகரை வைத்து படத்தை எடுப்பேன் என்று இயக்குனர் லிங்குசாமி கூறினார்.

சென்னை,

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்து 2010-ல் வெளியான 'பையா' படம் பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது. படத்தில் இடம்பெற்ற அடடா மழைடா, துளி துளி, என் காதல் சொல்ல உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

தற்போது 'பையா' படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி மீண்டும் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த நிலையில் 'பையா' படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து லிங்குசாமி கூறும்போது, ''பையா படத்தின் 2-ம் பாகம் நிச்சயம் வரும். 'பையா 2' படத்துக்கான கதையை தயார் செய்து விட்டேன். அந்த கதையை கார்த்தியிடமும் சொல்லி விட்டேன்.

ஆனால் அவர் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதால் தனது தோற்றத்தில் முதிர்ச்சி வந்துள்ளதாலும், ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதாலும் 'பையா 2' படத்தில் நடிக்க யோசிக்கிறார்.

'பையா 2' படத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்றால் வேறு நடிகரை வைத்து படத்தை எடுப்பேன். 'பையா 2' படத்திலும் கார் இருக்கும். ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்'' என்றார்.

1 More update

Next Story