'80-ஸ்களின் காதல் பாடல்' - புதிய பாடலை வெளியிட்ட சந்தானம் படக்குழு..!


80-ஸ்களின் காதல் பாடல் - புதிய பாடலை வெளியிட்ட சந்தானம் படக்குழு..!
x

'80-ஸ் பில்டப்' திரைப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். ராதிகா பிரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் 'ஒட்டி வாறேனே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. முத்தமிழ் எழுதியுள்ள இந்த பாடலை எஸ்.பி.சரண் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. '80-ஸ் பில்டப்' திரைப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story