தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்றுகூடிய 80-ஸ் நட்சத்திரங்கள்


தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்றுகூடிய 80-ஸ் நட்சத்திரங்கள்
x

80-களில் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக வலம் வந்த நடிகை சுஹாசினி, நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் மோகன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோர் தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்று கூடியுள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், 80-களில் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக வலம் வந்த நடிகை சுஹாசினி, நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் மோகன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோர் தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்று கூடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், 1980-களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகை குஷ்பு, நடிகை சுஹாசினி, கமல்ஹாசனின் 1986 விக்ரம் படத்தில் நடித்த லிஸ்ஸி, ராதா மற்றும் அம்பிகா சகோதரிகள், நடிகர் மோகன் என்கிற மைக் மோகன், நடிகர் ரஹ்மான், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். தவிர, நடிகை சுஹாசினி தனது திருமண புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.


Next Story