பரபரப்பான நடிகர் - டைரக்டர்


பரபரப்பான நடிகர் - டைரக்டர்
x

‘காந்தாரா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகர்- டைரக்டர் ஆகிவிட்டார், ரிஷப் ஷெட்டி.

கன்னடத்தில் பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிறார். 39 வயதான ரிஷப் ஷெட்டி எம்.பி.ஏ. படித்தவர். பிலிம் டைரக்‌ஷனில் டிப்ளமோ வாங்கி இருக்கிறார்.

2012-ல் 'துக்ளக்' படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகம் ஆனார். 'யக்சகானா' என்ற கர்நாடக நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019-ல் வெளிவந்த 'பெல் பாட்டம்' படம் சூப்பர் ஹிட் ஆனது.

ரிஷப் ஷெட்டியின் உண்மை பெயர், பிரஷாந்த் ஷெட்டி. இவருடைய தந்தை பாஸ்கர் ஷெட்டி ஒரு புகழ் பெற்ற ஜோதிடர். அவர்தான் ரிஷப் ஷெட்டி என்று பெயர் மாற்றம் செய்தார். அதிலிருந்து அதிர்ஷ்டம் அடித்தது ரிஷப் ஷெட்டிக்கு.

இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பிடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா. தமிழ் படங்களில் நடித்த 'குத்து' ரம்யா தான் அவர்.


Next Story
  • chat