இணையத்தில் வைரலாகும் 'விடுதலை' படத்தின் பாடல்


இணையத்தில் வைரலாகும்  விடுதலை படத்தின் பாடல்
x

இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று வெளியாகி கவனம் பெற்றது.

சென்னை,

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகி கவனம் பெற்றது.

சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


Next Story