டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் அதிரடி படம்


டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் அதிரடி படம்
x

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் அதிரடி படம்

இந்திய திரையலகில் முன்னனி டான்ஸ் மாஸ்டராக இருக்கும் பிருந்தா, தற்போது `குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்ற பெயரில் புதிய படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் ஹிருது ஹாரூன் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இவர் விஜய்சேதுபதி நடிக்கும் மும்பைக்கார் இந்தி படத்திலும் நடித்துள்ளார். பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், சரத், அனஸ்வர ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தை `புலி', `இரு முகன்' உள்ளிட்ட பல தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்த சிபு தமீம் மகள் ரியா சிபு தயாரித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இசை: சாம் சி.எஸ். ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசுவாமி.


Next Story