'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

அஜித்குமார் மற்றும் திரிஷா இருக்கும் புதிய போஸ்டரை 'விடாமுயற்சி' படக்குழு வெளியிட்டுள்ளது.
'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் அஜித் கருப்பு நிற கூலர்ஸுடன் பிளாக் அன் பிளாக் ஜெர்கினுடன் பாலைவன சாலையின் அருகில் கையில் ஒரு பையுடன் நடந்து வருமாறு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் நடித்துவரும் 'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு இன்று (ஜூலை19) வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். அஜித் - திரிஷா காம்போ ரசிக்க வைக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com