'இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்' - 'செம்பி' குறித்து நடிகர் பார்த்திபன்


இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும் - செம்பி குறித்து நடிகர் பார்த்திபன்
x

'செம்பி' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 'செம்பி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 'செம்பி' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், "செம்பி! செல்ஃபி எடுத்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வதைப் போல, 'செம்பி' முழுக்க

பிரபு சாலமனின் பேராண்மையை ரசித்தேன். பெரும் தைரியத்துடன் கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளா அவர்களையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதையே மைனாவாக்கி அதேயளவு அழகுணர்ச்சியும், அதிரடி கனெக்ட் செய்யும் கதைக்களமும் ஒரு குற்றத்திற்கு உரிய தீர்ப்பையும் இப்படிக் கூட செயல்படுத்த முடியும் என பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார்.

ஒளிப்பதிவும் இசைநுட்பமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு சமமாக வென்றிருக்கிறது. இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story