"ஆடு ஜீவிதம்" படத்திற்காக 4 மொழிகளில் டப்பிங் பேசிய நடிகர் பிருத்விராஜ்


ஆடு ஜீவிதம் படத்திற்காக 4 மொழிகளில் டப்பிங் பேசிய நடிகர் பிருத்விராஜ்
x

“ஆடு ஜீவிதம்” படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது 'ஆடு ஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், 4 மொழிகளில் டப்பிங் பணியை முடித்துள்ளதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,

"மலையாளம்(லைவ் சவுண்ட்), தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் பணிகள் முடிந்தன. இந்த கதாபாத்திரங்களில் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story