சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்
‘சூர்யா 44’ படப்பிடிப்பிற்காக அந்தமான் செல்ல இருக்கும் நிலையில் நேற்று சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூர்யா.
சென்னை,
'கங்குவா' படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சூர்யா 44' படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார். சமீபத்தில் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் குறித்தான அப்டேட் வெளியானது.
ஆனால், படத்தில் நடிகர் சூர்யா தவிர்த்து வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. வருகிற ஜூன் 2 அன்று படக்குழு அந்தமானில் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறது.
தொடர்ந்து 40 நாட்கள் படமாக்க இருக்கிறார்கள். அதிரடியான ஆக்சன் காட்சிகள்தான் முதலில் படமாகிறது. இதற்காக, அந்தமான் கிளம்பும் முன்பு சென்னையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூர்யா. இந்தப் புகைப்படங்கள் இன்று வெளியாகி இருக்கிறது.
'கங்குவா' படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவேகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. இந்த தீபாவளி ரிலீஸா அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமா எனவும் கேட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், அவரது இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, பேட்ட, மகான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.