நடிகையின் சேலையை பிடித்து இழுத்த நடிகர்: பட விழாவில் பரபரப்பு


நடிகையின் சேலையை பிடித்து இழுத்த நடிகர்: பட விழாவில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Aug 2023 10:01 AM IST (Updated: 21 Aug 2023 11:09 AM IST)
t-max-icont-min-icon

'கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்தின் புரமோஷன் விழா, ஐதராபாத்தில் நடந்தது

தெலுங்கில் கிருஷ்ணா சைதன்யா இயக்கி வரும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்தில் விஸ்வக் சென் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேஹா ஷெட்டி நடிக்கிறார்.

படத்தின் புரமோஷன் விழா, ஐதராபாத்தில் நடந்தது. இதில் விழா மேடையில் ஹீரோ விஸ்வக் சென் மற்றும் ஹீரோயின் நேஹா ஷெட்டி ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

அப்போது நேஹா ஷெட்டியின் சேலையை பிடித்து இழுத்து விஸ்வக் சென் நடனம் ஆடினார். சற்று அதிர்ச்சியானாலும், நடிகையும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து நடனம் ஆடினார். இருவரும் சேர்ந்து ஒரே சேலையில் பல அசைவுகளில் நடனம் ஆடினார்கள்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னதான் இருந்தாலும் மேடையில் நடிகையின் சேலையை பிடித்து இழுத்து ஆடியது முகம் சுளிக்க வைப்பதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஒட்டி வந்தது யாரு... ஒத்துழைத்தது யாரு? என்பது கேள்வியாக இருந்தாலும், மேடையில் போட்ட சேலை ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1 More update

Next Story