தன்னம்பிக்கை வளர்க்க நடிகை யோசனை


தன்னம்பிக்கை வளர்க்க நடிகை யோசனை
x

தன்னம்பிக்கை வளர்க்க நடிகை கிருத்தி சனோன் யோசனை தெரிவித்துள்ளார்.

ராமாயண கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பவர் கிருத்தி சனோன். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். கிருத்தி சனோன் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடிகையாக என்னை நிலை நிறுத்திக்கொளள முடியாமல் அழுத நேரங்கள் உண்டு. நம்மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். நம்மோடு அதிக நேரத்தை கழிப்பது நாம்தான்.சினேகிதர்கள், உறவினர்கள், யாரோ முகம் தெரியாதவர்களோடு கூட சத்தமாக பேசுவதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறோம். ஆனால் நம்மோடு மட்டும் நாம் கடுமையாக இருக்கிறோம். என்னால் எதுவுமே செய்ய முடியாது. இப்படி குண்டாகி போகிறோமே? இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? இப்படி நம் மீது நாம் எத்தனை குறைகளை சுமத்திக்கொள்கிறோம்.

இதனால் தேவையில்லாத நெருக்கடி, கவலை, தன்னம்பிக்கை இழந்து விடுவது எல்லாம் நடக்கும். அப்படி இருக்கவேண்டாம். மற்றவர்களோடு அல்ல உங்களோடு நீங்களே நன்றாக இருங்கள். உங்கள் மீது நீங்கள் அன்பு கொள்ளுங்கள். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுங்கள். வெற்றிகள் அதுவாகவே தேடி வரும்'' என்றார்.


Next Story