ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தில் இணையும் நடிகை லைலா!


ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் இணையும் நடிகை லைலா!
x

‘சப்தம்’ படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோரது கூட்டணியில் மீண்டும் ஒரு திகில் கதையம்சம் கொண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு 'சப்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மூணார் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து இந்த படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் இணைந்திருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் 'சப்தம்' படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு லைலா தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story