நடிகை மிர்னாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரல்


நடிகை மிர்னாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரல்
x

நடிகை மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர் மிர்னா மேனன். கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டார்.

'பட்டதாரி' படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. மிர்னா `களவாணி மாப்பிள்ளை', `புர்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். `ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான `பர்த் மார்க்' படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

தற்போது தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் அவர், அவ்வப்போது போட்டோ ஷூட்கள் நடத்தி தனது கவர்ச்சியான, கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

இந்நிலையில் இன்று மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்வதுப் போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஓடுவதும், குதிப்பதும், தலை கீழாக சுழலுவதும் பிரமிக்க வைக்கின்றது. தற்போது இப்பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.


Next Story