"எனது பெயரில் அந்தரங்க வீடியோ லீக்" டிவி விவாத நிகழ்ச்சியில் உடைத்த நடிகை ரேஷ்மா


எனது பெயரில் அந்தரங்க வீடியோ லீக் டிவி விவாத நிகழ்ச்சியில் உடைத்த நடிகை ரேஷ்மா
x

டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரேஷ்மா தனது ஆபாச மார்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை

விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. இந்த ஆண்டு விமல் நடிப்பில் ஓடிடி வெளியிடாக ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்ற 'விலங்கு' வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார்.

39 வயதாகும் இவர் அண்மையில் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு ஏற்பட்ட மார்பிங் அனுபவம் குறித்தும் அதை பார்த்து விட்டு குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் செம போல்டாக பேசினார்.

இது தொடர்பாக ரேஷ்மா பேசியுள்ள வீடியோவில், "என்னுடைய சகோதரி எனக்கு திடீரென்று போன் செய்து உன்னோட செக்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது என்று கூறினார். நான் அமெரிக்காவில் இருக்கிறேன், எனக்கு ஆளே இல்லை, என்னுடைய வீடியோ எப்படி ரிலீஸ் ஆக முடியும். அந்த வீடியோவை முதல்ல எனக்கு அனுப்பி வை என்று கூறினேன்.

என்னுடைய அம்மா என்னிடம் நேரடியாக கேட்காமல் என்னுடைய சகோதரியிடம் இதைச் சொல்லியிருக்கிறார். அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது. முழுக்க முழுக்க மார்பிங் வீடியோ என்று எனது குடும்பத்தினருக்கு புரிய வைத்து விட்டேன். என்னுடைய தந்தை தயாரிப்பாளர். சகோதரர் நடிகர். என்னுடைய குடும்பம் சினிமா பின்னணியில் உள்ளதால் இதை புரிந்து கொண்டார்கள்.

ஆனால் திரைப்பின்னணியில் இல்லாத எளிய பெண் ஒருவருக்கு இப்படி நடந்தால் நிச்சயமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பார். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். தற்கொலை வரைக்கூட சென்றிருக்கலாம். என்னுடைய குடும்பம் இதை அருமையாக எதிர்கொண்டனர். என வெளிப்படையாக அந்த வீடியோவில் பேசியுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.


Next Story